தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் STR.கடைசியாக சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.வெங்கட் பிரபுவின் மாநாடு,பத்துதல,கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம்,நடிகர் சங்கத்திற்காக ஒரு படம் என்று செம பிஸியாக இருக்கிறார் சிம்பு.

இவரது மாநாடு படத்தின் ரிலீஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதனை தொடர்ந்து வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தினை கெளதம் மேனன் இயக்குகிறார்.இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா,அச்சம் என்பது மடமையடா படங்களை அடுத்து சிம்பு கெளதம் மேனன்,ரஹ்மான் உள்ளிட்டோர் இணைவதால் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.வெந்து தணிந்தது காடு என்று இந்த படத்திற்கு பெயரிட்டுள்ளனர்.வித்தியாசமான தோற்றத்தில் சிம்பு இருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி ரசிகர்களை கவனம் ஈர்த்து வருகிறது.

ஏற்கனவே உடலெடையை குறைத்த சிம்பு இந்த படத்திற்காக இன்னும் 15 கிலோ குறைத்துள்ளார்.ராதிகா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது இந்த படத்தில் பாகுபலி 2,விஸ்வரூபம்,ஆரம்பம் உள்ளிட்ட படஙக்ளில் பணியாற்றிய ஸ்டண்ட் மாஸ்டர் Lee Whittaker இணைந்துள்ளார் என்ற தகவலை தனது ட்விட்டரில்  பகிர்ந்துள்ளார்.