தமிழ் சினிமாவின்  "தல" அஜித் குமார் நடிப்பில், இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ளது வலிமை திரைப்படம். நீண்ட நாட்களாக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வலிமை திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா ஒளிப்பதிவில், தயாராகும் அதிரடி திரைப்படமான வலிமை படத்தில் திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு பிரத்தியேகமாக அளித்த பேட்டியில் ஸ்டன்ட் இயக்குனர் திலிப் சுப்புராயன் அவர்கள் வலிமை படத்தின் பல ருசிகர தகவல்களை பகிர்ந்து கொண்டார். 

வலிமை படத்தின் பைக் ஸ்டன்ட் காட்சிகள் அனைத்தும் லைவ்வாக படமாக்கப்பட்டதாகவும் அஜித் அனைத்து ஸ்டண்ட் காட்சிகளிலும் டூப் இல்லாமல் ரிஸ்க் எடுத்து செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக வலிமை படத்தின் இன்டர்வல் காட்சி குறித்து பேசிய திலிப் சுப்புராயன் அவர்கள், கிட்டத்தட்ட 13 முதல் 14 நிமிடங்கள் நகரும் அந்த இன்டர்வல் காட்சி நிமிடத்திற்கு நிமிடம் பதைபதைக்கும் விதமாக மிகவும் பரபரப்பாக அடுத்து என்ன?.. அடுத்து என்ன..? என்று ரசிகர்களை இருக்கை நுனிக்கு வரவைக்கும் அளவுக்கு  பயமாகவும் மிகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் எனவும் தீபாவளியில் வலிமை படத்தின் ட்ரெய்லர் வெளியாகலாம் என்றும்  தெரிவித்துள்ளார். 
தெரிவித்துள்ளார். 

வருகிற 2022-ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வலிமை திரையரங்குகளில் ரிலீஸாக உள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள வெறித்தனமான இந்த அப்டேட் இன்னும் வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஸ்டன்ட் இயக்குனர் திலிப் சுப்புராயன் அவர்களின் வலிமை படம் குறித்த நமது கலாட்டாவின் பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.