நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதன் பரவலை தடுக்க ஒரே வழி சமூக இடைவெளியை கடைபிடிப்பது தான் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க இயலாமல் மக்கள் அவதி படுகின்றனர். உள்ளூரில் உணவின்றி தவிக்கும் மக்களும் ஏராளம். 

STR Phone Call To Corona Affected Fan

இந்நிலையில் கடலூர் மாவட்ட STR நற்பணி மன்றத்தின் தலைவர் C.N.சிம்புஆனந்தன் என்பவருக்கு கொரோனா நோய் உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஒரு வாரமாக சிதம்பரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்செய்தியை அறிந்த STR உடனடியாக மற்ற நிர்வாகிகள் மூலம் அவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

STR Phone Call To Corona Affected Fan

சிகிச்சை முறைகள் குறித்து விசாரித்த அவர் தன்னம்பிக்கை, மனதைரியத்துடன் இருக்கும்படி அறிவுரை கூறியுள்ளார். மேலும் சீக்கிரம் நலம் பெற்று வீடு திரும்ப  இறைவனிடம்  வேண்டுகிறேன் என்று பேசியுள்ளார். தன்னை நேசிக்கும் ரசிகர்களின் மேல் அன்பு கொண்ட STR-ன் இச்செயலை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.