எட்ஸெட்ரா எண்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிகை ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் மஹா. இந்த படத்தில் நடிகர் STR கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார். யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வாலு படத்திற்கு பிறகு சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே கூறலாம். கொரோனா வைரஸ் காரணமாக மஹா திரைப்படத்தின் ரிலீஸ் மற்றும் மீதம் இருந்த படப்பிடிப்பு தள்ளிப்போனது. 

ஸ்ரீகாந்த், தம்பி ராமய்யா, சனம் ஷெட்டி ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். சமீபத்தில் இப்படம் குறித்த ருசிகர தகவல் ஒன்றை வழங்கினார் தயாரிப்பாளர். அதாவது படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என்றும், நிச்சயம் STR ரசிகர்கள் விரும்பும் வகையில் இருக்கும் என்றும் கூறினார். மஹா திரைப்படம் சிறந்த கமர்ஷியல் படமாக இருக்கும் என்று கூறினார். 

இந்நிலையில் மஹா படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் மற்றும் இயக்குனர் ஜமீல் இருவரும் சேர்ந்து இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு சர்ப்ரைஸ் தந்துள்ளனர். இன்று ஜிப்ரானின் பிறந்தநாள் என்பதால், அவர் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஈர்த்து வருகிறது. 

வாகை சூடவா படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். வத்திக்குச்சி, நய்யாண்டி, உத்தம வில்லன், பாபநாசம், விஸ்வரூபம் 2, ராட்சசன் போன்ற படங்களுக்கு இசையமைத்தார். மெலடியில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களை ஈர்த்து வருகிறார். கடைசியாக வைபவ் நடித்த சிக்ஸர் படத்திற்கு இசையமைத்தார் ஜிப்ரான். 

இந்த லாக்டவுனில் ஜிப்ரான் தனது டிக்டாக் மற்றும் ஹலோ அக்கௌன்ட்டுகளை நீக்கியது ரசிகர்களின் பாராட்டை பெற்றது. சீனாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய மக்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் சீன ஆப்களை நீக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். சீன தயாரிப்புகள் எதையும் இனி உபயோகப்படுத்த கூடாது என்ற எண்ணத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. விஜய்சேதுபதி நடிப்பில் உருவான க.பெ. ரணசிங்கம் படத்தின் இசைபணிகளை முடித்த ஜிப்ரான், அடுத்ததாக மாதவன் நடிக்கும் மாறா படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.