வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு திரைப்படம் பற்றிய சிறப்பு தகவல் !
By Sakthi Priyan | Galatta | October 07, 2020 09:48 AM IST

எப்போதும் ட்ரெண்டிங்கில் இருப்பவர் நடிகர் STR. சென்ற லாக்டவுனில் கெளதம் மேனன் இயக்கத்தில் கார்த்திக் டயல் செய்த எண் எனும் குறும்படத்தில் நடித்து ஓர் ட்ரெண்ட் செட் செய்தார். STR ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார்.
கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்பு சென்னை VGP கோல்டன் கடற்கரையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஹைதராபாத் விரைவதாக இருந்தனர் படக்குழுவினர்.
சமீபத்தில் லைவ் நேர்காணலில் தோன்றிய இயக்குனர் வெங்கட் பிரபு, மாநாடு படத்தின் ஷூட்டிங் பற்றியும், முதல் பாடல் பற்றியும் பேசியுள்ளார். மாநாடு படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அதிக நபர்களை கொண்டுள்ளதால், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் முதல் அதிக நபர்கள் தேவை படுகிறது என்று கூறியிருந்தார். ஒரு மாநாட்டில் நடக்கும் கதை என்பதால், அதற்கு ஏற்றார் போல் செட் அமைத்து ஷூட்டிங் நடத்த வேண்டும்.
தற்போது உள்ள சூழலில் சமூக இடைவெளி மிகவும் அவசியம். அதனால் அரசு அனுமதித்த பிறகே, இயல்பு நிலை திரும்பியவுடன் மாநாடு படப்பிடிப்பு துவங்கும் என்று கூறியிருந்தார். மேலும் படத்தின் முதல் பாடல் ரெடி. மதன் கார்க்கியின் வரிகளில் முதல் பாடல் சிறப்பாக வந்துள்ளது எனவும் கூறியிருந்தார்.
லாக்டவுனும் முடிந்தது. மாநாடு படம் தொடர்பான அப்டேட்டுகள் ஏதாவது கிடைக்காதா என்ற ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு, தற்போது சுவையூட்டும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. மாநாடு படத்தின் ஷூட்டிங் வரும் நவம்பர் மாதம் முதல் வாரம் முதல் துவங்கவுள்ளதாம். இந்த செய்தியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் STR ரசிகர்கள்.
STR கைவசம் மஹா திரைப்படம் உள்ளது. இந்த படத்தில் நடிகர் STR கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார். எட்ஸெட்ரா எண்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிகை ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் மஹா. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வாலு படத்திற்கு பிறகு சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.
Wait s over. #Maanaadu shoot resumes from November first week.#STR #SilambarasanTR @vp_offl @kalyanipriyan @iam_SJSuryah @Premgiamaren @Anjenakirti @johnmediamanagr
— sureshkamatchi (@sureshkamatchi) October 6, 2020
Bigg Boss announces first 4 contestants who are in danger zone - New Promo
07/10/2020 09:00 AM
Deepest condolences to actor Ajay Devgn and family!
06/10/2020 07:13 PM