வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து STR 45 படத்திலும் நடித்து வந்தார்.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

STR Maanaadu Producer Suresh Kamatchi Statement

இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.எஸ்.ஏ.சந்திரசேகர்,பாரதிராஜா,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.யுவன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

STR Maanaadu Producer Suresh Kamatchi Statement

இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படப்பிடிப்பிற்கு STR தாமதமாக வருகிறார்,இரண்டு கேரவன் கேட்கிறார் என்றெல்லாம் செய்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தன.இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

STR Maanaadu Producer Suresh Kamatchi Statement

அதில் அவர் கூறியுள்ளதாவது.ஆறு நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது என்றும் இதில் ஒரு நாள் கூட STR தாமதமாக வந்ததில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தனது காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்தபின்பும் கேரவனுக்கு செல்லாமல் அங்கேயே குடையை பிடித்து உட்காந்திருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

STR Maanaadu Producer Suresh Kamatchi Statement

8ஆம் தேதி முதல் ஹைதராபாதில் ஷூட்டிங் நடைபெறவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் தவறான செய்திகளை பரப்பி எங்களை நெருக்கடிக்கு உள்ளாகாதீர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

STR Maanaadu Producer Suresh Kamatchi Statement