எப்போதும் டாக் ஆஃப் தி டவுனில் இருப்பவர் நடிகர் சிலம்பரசன். சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன். இந்தப் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இம்மாதம் நவம்பர் 6-ம் தேதி நிறைவடைந்தது. கிராமத்துப் பின்னணியை கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 

நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார். நந்திதா ஸ்வேதா, பால சரவணன் உட்பட பலர் நடித்துள்ளனர். திரு ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்துக்காக நடிகர் சிம்பு உடல் எடையைக் குறைத்து, ஸ்லிம் ஆகி அசத்தினார். ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. 

இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததும், படத்தில் பணியாற்றியவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கினார்.
ஒரு கிராம் தங்கம், வேட்டி சேலை, இனிப்புகள் என தீபாவளி பரிசுகளை வழங்கினார் சிலம்பரசன். பின்னர் ஈஸ்வரன் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததைத் தொடர்ந்து, படத்தின் டப்பிங் பணியை தொடர்ந்தார் சிம்பு. அதையும் வேகமாக முடித்துவிட்டார். 

இந்நிலையில் புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் சிம்பு. கருப்பு சட்டை அணிந்து தாடியுடன் ஸ்டைலாக தண்ணீருக்குள் நிற்கும் அந்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் அவரை வாழ்த்தி கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு நேற்று மீண்டும் துவங்கியது. 

புதுச்சேரியில் நடக்கும் மாநாடு படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொண்டுள்ளார். முறையான பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு. முன்பெல்லாம் சிம்புவின் படங்கள் பற்றி இயக்குனர்கள் அல்லது தயாரிப்பு நிறுவனங்கள் அப்டேட் கொடுத்தால் தான் தெரிய வரும். ஆனால் தற்போது அப்படி இல்லை. சிம்பு மீண்டும் சமூக வலைதளங்களில் என்ட்ரி கொடுத்ததில் இருந்து தன் படங்கள் குறித்து அவரே அவ்வப்போது அப்டேட் கொடுத்து அசத்திக் கொண்டிருக்கிறார். மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொண்டதை புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளார் சிம்பு.