கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு நேரத்தில் மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, நடனமாடுவது, பாடல் பாடுவது, சமையல் செய்வது என நேரத்தை செலவு செய்து வருகின்றனர். டல்கோனா காஃபி முதல் வித விதமன டிஷ்களை செய்து அசத்தி வருகின்றனர் திரைப்பிரபலங்கள். 

STR Cooking With VTV Ganesh In Lockdown

இந்நிலையில் நடிகர் STR வீட்டில் சமையல் செய்யத் துவங்கியுள்ளார். சிறு வயது முதலே நடிப்பு, நடனம், பாடல், இசை, இயக்கம் என சினிமாவில் அனைத்தையும் கரைத்துக் குடித்தவர் STR. சகலகலா வல்லவனாக திகழும் STR-க்கு சமையலும் கை வந்த கலை என்பதை நிரூபித்துள்ளார். லாக்டவுன் முழுவதுமே தனது அம்மா உஷாவுக்கு சமையலில் ஓய்வு கொடுத்துள்ளார் என்றும், தாய் தந்தைக்கு வீட்டில் தினமும் வித விதமான உணவுகளை சமைத்து போட்டு அசத்தி வருகிறார். 

STR Cooking With VTV Ganesh In Lockdown

தற்போது கிச்சனில் நடிகர் VTV கணேஷுடன் சேர்ந்து சமையல் செய்யும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மாநாடு படத்திற்காக உடல் எடையை குறைத்த சிம்பு, வீட்டிலேயே கடுமையான ஒர்க்கவுட்டையும் செய்து வருகிறார். வீட்டிற்கு வரப்போகும் பெண்ணிற்கு வேலையே இல்லாமல் செய்துவிட்டாயே என்று கணேஷ் கூற, வீட்டிற்கு வரும் பெண் சமையல் செய்யவா வருகிறாள் ? வருங்கால மனைவி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பேன் என்றும் கூறியுள்ளார் நம் STR.