STR 45 கைவிடப்பட்டதா ? தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் இதோ !
By Aravind Selvam | Galatta | September 03, 2019 16:53 PM IST
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்தார்.இதற்கு அடுத்து STR , Studio Green தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்திற்கு STR 45 என்று தற்காலிகமாக பெயரிட்டுள்ளனர்.
Studio Green நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை நாரதன் இயக்குகிறார்.கெளதம் கார்த்திக் படத்தின் மற்றுமொரு நாயகனாக நடித்துள்ளார்.இந்த படம் கன்னட சூப்பர்ஹிட் படமான Mufti படத்தின் ரீமேக்காக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.இந்த படம் கைவிடப்பட்டுவிட்டதாக சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இது குறித்து தற்போது படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கலாட்டாவுக்கு பிரத்யேகமாக பதில் அளித்துள்ளார்.
STR 45 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்.இந்த படத்தின் Firstlook ,டைட்டில் உள்ளிட்ட அனைத்தும் ரெடியாக உள்ளது என்றும் வெகு விரைவில் அதனை வெளியிட திட்டமிட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.இந்த படம் நிச்சயம் STR ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்றும் அவர் தெரிவித்துளளார்.