கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் அதுவும் சென்னையில் தினமும் 1000த்துக்கும் மேற்பட்ட புதிய கேஸ்கள் வந்த வண்ணம் உள்ளன.இதனை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.மூன்று மாதங்கள் கழித்து அரசு அளித்த சில தளர்வுகளோடு அனைத்து சேனல்களிலும் சீரியல் ஷூட்டிங்குகள் தொடங்கி ஷூட்டிங்குகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய எபிசோடுகள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன.புதிய எபிசோடுகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பையும் பெற்று வருகின்றன.

சீரியல் ஷூட்டிங்குகளை தொடர்ந்து ஷோக்களின் ஷூட்டிங்கையும் விஜய் டிவி தக்க பாதுகாப்புடன் தொடங்கியது.புதிய ஷோக்கள்,புதிய கட்டுப்பாடுகள் என்று ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு இருக்கும் நடிகர்,நடிகர்களை வைத்து விஜய் டிவி அசத்தி வருகின்றனர்.புதிய நிகழ்ச்சிகளும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

தற்போது சீரியலில் உள்ள நடிகர் நடிகைகளை வைத்து ஒரு ஸ்பெஷல் ஷோ ஒன்றை விஜய் டிவி படமாக்கியுள்ளனர்.பல அழகிய தருணங்களோடு உருவாகியுள்ள இந்த ஷோவை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்த ஷோவின் ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்