இந்திய  திரையுலகின் பிரமாண்ட இயக்குனரான இயக்குனர் S.S.ராஜமௌலியின் இயக்கத்தில் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக  தயாராகி வருகிறது RRR. திரைப்படம். RRR திரைப்படத்தில் தெலுங்கு சினிமாவின் நட்சத்திர கதாநாயகர்களான ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் பாலிவுட் நடிகை ஆலியா பட் கதாநாயகியாக நடிக்க, அஜய் தேவ்கன் , சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஒளிப்பதிவாளர் KK.செந்தில்குமார் ஒளிப்பதிவில் தயாராகும் RRR படத்திற்கு இசையமைப்பாளர் M.M.கீரவாணி இசையமைக்கிறார். 

DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.தனயா தயாரிக்கும் RRR திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் பெண் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் வெளியிடுகின்றன. அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 7 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் பல்வேறு மொழிகளில் ரிலீசாகிறது RRR திரைப்படம்.

சமீபத்தில் வெளியான RRR GLIMPSE வீடியோ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாளை வெளிவரவிருக்கும் RRR படத்தின் “நாட்டு கூத்து” பாடலின் புதிய ப்ரோமோ வீடியோ இன்று வெளியானது. அதிரடியான நாட்டுக்கூத்து ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.