கடந்த 2003-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார் நகுல். நடிகை தேவயானியின் தம்பியான இவர் காதலில் விழுந்தேன் படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதன் பிறகு மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற வெற்றி படங்களில் நடித்தார். சிறந்த நடிகரான இவர் சீரான பாடகரும் கூட. அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன் உள்ளிட்ட படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார். 

இதற்கிடையில் இந்த லாக் டவுனில் அவ்வப்போது தனது மனைவி ஸ்ருதியுடன் சேர்ந்து பாடும் கியூட் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தனது 36வது பிறந்தநாளை கொண்டாடிய நகுல் அன்றைய தினத்தில் தான் மனைவி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்துள்ளார். 

இந்நிலையில் நடிகர் நகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தன் மனைவியுடன் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு அதில் எனது குடும்பத்தினர் வீட்டிலேயே சிறிய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர். நாங்களும் எங்கள் வீட்டு நாய்க்களும், பூனைகளும் மட்டும் என்று வேடிக்கையாக இந்த நல்ல செய்தியினை பகிர்ந்துள்ளார்.  இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் தாய் தந்தை ஸ்தானத்தானத்தை பெறவிருக்கும் நடிகர் நகுல் மற்றும் அவரது மனைவி ஸ்ருதி இருவரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா. 

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில், பலர் தங்களது வீட்டிலேயே குறைந்த நபர்களுடன் சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். கல்யாணம், வளைகாப்பு, பிறந்தநாள், நிச்சயதார்த்தம் என பல சுப நிகழ்வுகளை எளிமையாக செய்து முடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை மாறி இதிலிருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர்.