கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தங்களது கலக்கலான தொடர்கள் மூலமும் நிகழ்ச்சிகள் மூலமும் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வரும் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக முன்னேறி வருகிறது.குறிப்பாக இவர்களது சீரியல்களுக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது.பலரும் இவர்களது தொடர்களில் நடித்து நட்சத்திரங்களாக மாறியுள்ளனர்.

கடந்து சில ஆண்டுகளில் பல வெற்றி தொடர்களை கலர்ஸ் தமிழ் உருவாக்கியுள்ளனர்.கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பை தொடங்கி வெற்றிநடைபோட்டு வரும் தொடர் நம்ம மதுரை சிஸ்டர்ஸ்.4 நாயகிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சாயா சிங்,சுனிதா,சங்கவி,ஐரா அகர்வால் உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்து வந்தனர்.இவர்களுடன் தீபக் குமார் உள்ளிட்ட சில நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தொடரின் முன்னணி வேடத்தில் நடித்து வந்த சாயா சிங் சில காரணங்களால் விலக இவருக்கு பதிலாக பிரபல சீரியல் நடிகை ஸ்ருதி லக்ஷ்மி இணைந்துள்ளார்.இவரது எபிசோடுகள் தற்போது ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.சாயா சிங் திடீரென விலகியது ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.