1994-ம் ஆண்டு வெளியான புதிய மன்னர்கள் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீமன். குணச்சித்திர ரோல், வில்லன் கதாப்பாத்திரங்ள் என எந்தவொரு பாத்திரம் தந்தாலும், அதை ஏற்று நடிக்கும் திறனுடையவர். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜயகாந்த், விக்ரம், விஜய், அஜித், போன்ற நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

பஞ்ச தந்திரம், போக்கிரி போன்ற படங்களில் ஹீரோவின் நண்பராகவும் அதிக நேரம் தோன்றி அசத்தியிருப்பார். ஃபிரண்ட்ஸ் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாகவும் நடித்து ஆச்சர்யபட வைத்தார் ஸ்ரீமன். 90ஸ் கிட்ஸ் மறக்கமுடியாத அளவிற்கு சேது படத்தில் சியான் விக்ரமுக்கு நண்பராக நடித்தார். கடைசியாக சூப்பர்ஸ்டார் நடித்த தர்பார் திரைப்படத்தில் நடித்தார். அன்று தொடங்கி இன்று வரை எல்லா முன்னணி நடிகர்களுடனும் இவர் ஜோடி சேர்த்து நடித்துள்ளார். 

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யின் க்யூட்டான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், நண்பன் படத்தில் விஜய் பேசும் ஆல் இஸ் வெல் வசனம் மற்றும் நேர்மறையான எண்ணங்களை பரப்பும் விதமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன என பதிவு செய்துள்ளார். ஸ்ரீமனின் இந்த பதிவை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

மேலும் ஸ்ரீமன் தனது பதிவில் தெரிவித்திருப்பதாவது, நீ வேற லெவல் நண்பா. செம க்யூட்டான க்ளிப். இந்த வீடியோவில் வெளிப்படுத்தியிருக்கும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பைத் தாண்டி இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள்.என் நண்பர் ஸ்டேட்டஸ் மெசேஜ் வைத்திருந்தார். அதைப்பார்த்து பாசிட்டிவ்வாக உணர்ந்தேன். நாம் அனைவரும் எஸ்.பி.பி.க்காக கூட்டுப் பிரார்த்தனையில் இன்று மாலை 6 மணிக்கு ஈடுபடுவோம். விரைவில் கொரோனாவில் இருந்து உலகம் விடுபடட்டும் என்று தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஸ்ரீமன். தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடிக்கும் இந்த படம் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.