பிரபல ஹிட் பட ரீமேக்கில் நடிகை ஸ்ரேயா !
By Sakthi Priyan | Galatta | November 11, 2019 16:35 PM IST

இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில் சமீபத்தில் வெளியான படம் அசுரன். இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுது. பூமணி எழுதிய வெக்கை நாவலை தழுவி எடுக்கப்பட்ட அசுரன் படத்தில் நில அபகரிப்பு, சாதி ரீதியான பாகுபாடு போன்ற பல்வேறு சமூகம் சார்ந்த விவாதங்களை ஆழமாக காட்டியிருந்தார்கள்.
திரைக்கு வந்த மூன்றே வாரத்தில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. ஜிவி பிரகாஷ் இசையமைத்த அனைத்து பாடல்களும் பட்டையை கிளப்பியது.
இந்நிலையில் அசுரன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள். தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். மேலும் மஞ்சு வாரியார் நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ரேயாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.