தனது குரலால் உலகையே வசப்படுத்தியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இசை பிரியர்களின் உலகமான எஸ்.பி.பி-க்கு கடந்த மாதம் ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்பிபிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது. 

அவர் மீண்டும் நலமுடன் திரும்பி வர வேண்டும் என்று திரையுலக பிரபலங்களும் கோடானகோடி ரசிகர்களும் சமீபத்தில் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் தொடர்ந்து ஒவ்வொருநாளும் தனது தந்தையின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். 

கடந்த வாரம் முதலே அவரது உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்து வந்தார். இன்று அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது, கடைசியாக 10-ம் தேதி உங்களுக்கு அப்டேட் கொடுத்திருந்தேன். இந்த 4 நாட்களில் அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிகிறது. நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

பிசியோதெரபி சிகிச்சையும் தொடர்ந்து வருகிறது. அப்பா அதில் சுறுசுறுப்பாக பங்கேற்று வருகிறார். மருத்துவர்கள் உதவியுடன் 15 முதல் 20 நிமிடங்கள் அப்பாவால் உட்கார முடிகிறது. வாய் வழியாக சாப்பிட வைப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன.

அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம் தொடர்கிறது. உங்கள் அன்பு, அக்கறை மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி என்று எஸ்.பி.சரண் வீடியோவில் தெரிவித்துள்ளார். இச்செய்தி அறிந்த இசை பிரியர்கள் நிம்மதியாக உள்ளனர். அவர் விரைவில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்புவார் என்று சரணின் பதிவில் கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on