என்னிடம் வாய்ப்பு கேட்டவர்களுள் அவரும் ஒருவர். அவர் மாபெரும் வெற்றி அடைந்தார். எனக்கு அது நியாபகமில்லை. ஒரு நாள் தயாரிப்பாளர் விஜய்சேதுபதியின் கால்-ஷீட் கிடைக்குமா என்று கேட்டார். உடனே நான் அவரை தொலைபேசி வாயிலாக முயற்சி செய்தேன். பத்து நிமிடம் இருங்க சார் என்றார். சிறிது நேரம் கழித்து பார்த்தால் என் இல்லத்திற்கு வந்து அதிர்ச்சியளித்தார். 

vijaysethupathi

ஏதும் கேட்காமல் அக்ரீமென்டில் கையெழுத்திட்டார். படித்து பார்க்காமல் என்ன ஏதென்று கேட்காமல் கையெழுத்திடுகிறீர்களே என்று கேட்டேன். அதற்கு அவர், வாய்ப்பு தேடி வருபவர்களை வரவேற்று, உபசரித்து அனுப்புபவர் நீங்கள். உங்களிடம் இந்த முறை வாய்ப்பு பெற்றே ஆக வேண்டும் என்று தான் அப்படி செய்தேன் என்றாராம் விஜய்சேதுபதி. 

spjananadhan

அதுமட்டுமல்லாமல் என்னிடம் இருக்கும் மாணவர்களான எனது உதவி இயக்குனர்களுக்கு நீங்கள் தான் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தேன். அதனையும் பூர்த்தி செய்தார். நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள் ? நாம் படம் செய்யலாமே என்று லாபம் திரைப்படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் விஜய்சேதுபதி. இவ்வாறே கலாட்டா நேர்காணலில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் விஜய்சேதுபதி பற்றி கூறியுள்ளார்.