இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற நட்சத்திர நாயகர்களில் ஒருவராக ஜொலிக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 2வது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் திரையுலகில் தயாரிப்பாளர், இயக்குனர், கிராஃபிக் டிசைனர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருகிறார். முன்னதாக ரஜினிகாந்தின் படையப்பா, பாபா, சந்திரமுகி, சிவாஜி உள்ளிட்ட திரைப்படங்களுக்கு டைட்டில் டிசைனராக பணியாற்றியுள்ளார்.

முழுக்க முழுக்க 3டி அனிமேஷன் திரைப்படமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தை இயக்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த், தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் தயாரான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தையும் இயக்கினார். மேலும் தயாரிப்பாளராக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த கோவா திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

அடுத்ததாக எழுத்தாளர் கல்கியின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை அணிமேஷன் வெப்சீரிஸாக உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு விசாகன் வணங்காமுடியை திருமணம் செய்துகொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு தற்போது 2வது ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

2வது குழந்தைக்கு தாயாகியுள்ள சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு  கலாட்டா குழுமமும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் சமூக வலைதளங்களில் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது 2வது குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி எனப் பெயர் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து பதிவிட்டுள்ள சௌந்தர்யா ரஜினிகாந்த், “கடவுளின் கருணையால் விசாகன், வேத் மற்றும் நான் மூவரும் இணைந்து வேத்-ன் குட்டி தம்பி வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி-யை இன்று செப்டம்பர் 11 ஆம் தேதி வரவேற்கிறோம். மருத்துவர்கள் சுமனா மனோகர், ஸ்ரீ வித்யா சேஷாத்ரி, சேஷாத்ரி சுரேஷ் ஆகியோருக்கு மிக்க நன்றி” என பதிவிட்டுள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்தின் அந்த பதிவு இதோ…

With gods abundant grace and our parents blessings 🙏🏻😇Vishagan,Ved and I are thrilled to welcome Ved’s little brother 💙💙💙 VEER RAJINIKANTH VANANGAMUDI today 11/9/22 #Veer #Blessed 😇🥰thank you to our amazing doctors @sumana_manohar Dr.Srividya Seshadri @SeshadriSuresh3 🙏🏻 pic.twitter.com/a8tXbqmTxf

— soundarya rajnikanth (@soundaryaarajni) September 11, 2022