"வெற்றிமாறன் என்ற ஒரு பெயர்!"- விடுதலை படத்திற்காக பல படங்களை கைவிட்ட சூரியின் அசத்தலான பேட்டி இதோ!

விடுதலை படத்திற்காக பல படங்களை கைவிட்ட சூரியின் பேட்டி,Soori reveals why he missed other movies for vetrimaaran in viduthalai | Galatta

முதல்முறையாக தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றிமாறன் திரைப்படத்தில் இணைந்த சூரி நகைச்சுவை நடிகராக நடிக்கவில்லை கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குமரேசன் எனும் காவலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூரி உடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் எனும் மிக முக்கிய வேடத்தில் விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக தயாராகி இருக்கும் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளிவந்து ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களுடன் சிறப்பு நேர்காணலில் பேசிய நடிகர் சூரி அவர்களிடம், “இந்த விடுதலை திரைப்படத்தின் பாகம் 1, 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2023 ஆம் ஆண்டில் முடிந்துள்ளது. ஒரு நகைச்சுவை நடிகர் என்றால் ஒரு படத்திற்கு போவீர்கள் 10 நாள் 15 நாள் நடிப்பீர்கள் மற்றொரு படத்திற்கு போகிறீர்கள் அங்கு ஒரு 10-15 நாள் நடிப்பீர்கள் பணம் வாங்குவீர்கள் எனவே தொடர்ந்து வருமானம் வந்து கொண்டே இருக்கும். உங்களுக்கு எப்போவாவது தோன்றியதா இந்த காலகட்டத்தில் எவ்வளவு நகைச்சுவைக் கதாபாத்திரங்கள் செய்திருக்கலாம். எவ்வளவு சம்பாதித்து இருக்கலாம் எப்போதாவது தோன்றியதா? எனக் கேட்டபோது, 

“கண்டிப்பா தோன்றியது சார்.. நாம் எவ்வளவு திரைப்படங்களை கைவிட்டு இருக்கிறோம். நிறைய திரைப்படங்கள் நான் கைவிட்ட திரைப்படங்களை அவரது(வெற்றிமாறன்) பார்வைக்கு நான் கொண்டு சென்றதே கிடையாது. கேட்டால் அதை ஏன் கைவிட்டாய் என்று தான் சொல்வார். அதேபோல் வேறு ஏதாவது படத்தில் இருந்தால் அவர் கூப்பிடும் போது வர முடியாது. இந்த மாதம் தயாராக இரு என்று சொல்லி இருப்பார் ஆனால் அந்த மாதத்தில் போயிருக்க மாட்டோம். இப்படி படப்பிடிப்பிற்கு போக முடியாமலே பல நாட்கள் இருந்திருக்கிறேன்.  அப்படி இருந்ததற்கு அவரது பார்வையில் பார்த்தால் பல காரணங்கள் இருக்கும். அப்படி இருந்தும் இடையில் நான் நடித்த படங்கள் எல்லாமே அவர் சொல்லி நடித்தது தான். அவருடைய பார்வைக்கு நான் கொண்டு சென்றாலே கைவிட வேண்டாம் நடித்துவிட்டு வந்து விடுங்கள் என்று தான் சொல்வார். நிறைய படங்களை அவரிடம் கேட்காமலேயே ஒதுக்கி விட்டேன். எண்ணிக்கையில் ஒரு குறிப்பிட்ட படங்கள் மற்றும் பணம் நான் கைவிட்டு இருப்பேன். ஒருவேளை செய்திருந்தால் இத்தனை படங்கள் நடித்து இருப்போம் பணமாக வந்திருந்தாலும் இவ்வளவு பணம் வந்திருக்கும் என நினைத்திருக்கிறேன். ஆனால் ஒன்றை மட்டும் சொல்வேன் நான் இப்போது கஷ்டத்தில் கிடையாது. எங்கிருந்தோ வந்த எனக்கு கடவுள் இப்போது ஒரு நல்ல வாழ்க்கை கொடுத்திருக்கிறார். என்னுடைய வங்கிக் கணக்கில் கொஞ்சம் பணம் கூடும் நான் நடித்த படங்களில் எண்ணிக்கை கூடுமே தவிர, இந்த படம் மீண்டும் எனக்கு கிடைக்குமா என்றால் தெரியாது. இதேபோல் இன்னொரு இயக்குனர் நம்ம இப்படி கண்டுபிடிப்பாரா என்றால் தெரியாது. எப்படி அத்தனை கடினமான காலகட்டத்திற்கு நடுவில் இயக்குனர் சுசீந்தரன் அவர்களின் கண்ணுக்கு நாம் பட்டோமோ.. அதுபோல் வெற்றிமாறன் அண்ணனின் கண்ணில் பட்டது , மீண்டும் படுவோமா என்பது தெரியாது. மற்றொரு விஷயம் வழக்கமாக சூரியை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சூரியை வேறு ஒன்றாக பார்க்க வேண்டும் என எனக்கு ஒரு ஆசை. நான் காமெடியனாக இருக்கும்போதே வாய்ப்புகள் எல்லாம் வந்தது அப்போது என்னவென்றால் ஹீரோ இல்லாமல் அந்த ஒரு நகைச்சுவை இடம்... இங்கே ஹீரோவுடன் நான் பைக்கில் போய் கொண்டு இருந்தேன் அங்கே நானே பைக் ஓட்டுகிறேன் அவ்வளவுதான் இருக்கும். அதுவும் நகைச்சுவை தானே முழுவதும்... எனக்கு வேறு ஒரு ஆளாக நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது. அதை வெளியில் கொண்டுவர ஆளில்லை. ஆனால் இந்த ஒரு படம் எனக்கு பெயரையும் புகழையும் வாங்கி கொடுக்கும். வெற்றிமாறன் என்ற ஒரு பெயர். இவருடன் நாம் இணைந்த நடிக்கிறோம் என்பதை நினைக்கும் போது தெளிவாகத்தான் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறேன்." என பதிலளித்துள்ளார். சூரியின் அந்த முழு பேட்டி இதோ…
 

'இது ரொம்ப CHEAP!'- சக நடிகர்களோடு தொடர்புபடுத்தி பரவிய வதந்திகளுக்கு தரமான பதிலடி கொடுத்த வாணி போஜன்! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

'இது ரொம்ப CHEAP!'- சக நடிகர்களோடு தொடர்புபடுத்தி பரவிய வதந்திகளுக்கு தரமான பதிலடி கொடுத்த வாணி போஜன்! ட்ரெண்டிங் வீடியோ

நெருக்கமாக நடித்தால் தவறாக மதிப்பிடுகிறார்கள்!- INTIMACY காட்சிகள் பற்றி பொன்னியின் செல்வன் நாயகி சோபிதாவின் பளிச் பதில்! வைரல் வீடியோ
சினிமா

நெருக்கமாக நடித்தால் தவறாக மதிப்பிடுகிறார்கள்!- INTIMACY காட்சிகள் பற்றி பொன்னியின் செல்வன் நாயகி சோபிதாவின் பளிச் பதில்! வைரல் வீடியோ

ஆர்யாவின் அடுத்த அதிரடி அவதாரமாக காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்... பக்கா ஆக்ஷனில் மாஸான டீசர் இதோ!
சினிமா

ஆர்யாவின் அடுத்த அதிரடி அவதாரமாக காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்... பக்கா ஆக்ஷனில் மாஸான டீசர் இதோ!