விடுதலை படத்திற்காக வெற்றிமாறன் தன்னை தேர்ந்தெடுத்த காரணம் இதுதான்!- ட்ரெண்டாகும் சூரியின் ஸ்பெஷல் பேட்டி இதோ

வெற்றிமாறன் விடுதலை படத்தில் சூர்யா தேர்ந்தெடுத்த காரணம்,Soori reveals how vetrimaaran chose him for viduthalai movie | Galatta

தமிழ் சினிமாவின் புகழை உலகறியச் செய்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக நடிகர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க இருக்கிறார். தொடர்ந்து வடசென்னை 2 திரைப்படத்தையும் இயக்க இருப்பதாக தெரிகிறது. முன்னதாக எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவான திரைப்படம் விடுதலை. நகைச்சுவை நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள விடுதலை திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஆர் எஸ் இன்ஃபோடைன்மென்ட் மற்றும் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரிக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட விடுதலை பாகம் 1 திரைப்படம் கடந்த மார்ச் 31ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி அரங்கு நிறைந்த காட்சிகளாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலுக்கு திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களோடு சிறப்பு பேட்டி கொடுத்த சூரி பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “இயக்குனர் வெற்றிமாறன் அவர்களிடம் முதலில் கேட்டோம் நீங்கள் நடிகர் சூரியிடம் என்ன பார்த்தீர்கள் என்று... ஏனென்றால் நீங்கள் வந்து இதுவரை எல்லாமே நகைச்சுவை கதாபாத்திரங்கள் தான் செய்துள்ளீர்கள் எனவே அவர் உங்களிடம் அப்படி என்ன பார்த்தார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என அவரிடம் கேட்டோம் அவரும் பதில் சொன்னார். நீங்கள் கேட்டீர்களா அவரை, என்னை எதற்காக இந்த படத்தில் எடுத்தீர்கள்… நான் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு எப்படி வந்தது என கேட்டீர்களா அவரை?” எனக் கேட்டபோது,

“ஆம் பல நாள் என் மனதிற்குள் அந்த கேள்வி இருந்திருக்கிறது. அதிகமாக வெற்றிமாறன் அண்ணனுடன் பழக்கமும் இல்லை, அவரோடு இணைந்து எந்த திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரம் கூட நடித்ததில்லை... ஒருவேளை நான் நடித்த படங்களை பார்த்திருக்கலாம் அவர். வெற்றிமாறன் அவர்கள் நினைத்தார் என்றால் அவரோடு இணைந்து பணியாற்றுவதற்கும் நடிப்பதற்கு எத்தனையோ பேர் காத்திருக்கிறார்கள். யாரை தேர்ந்தெடுப்பது என தேர்ந்தெடுக்க அவர் இருக்கிறார். இப்படி இருக்கும் போது ஒரு நகைச்சுவை நடிகர். என்னை ஏன் தேர்ந்தெடுத்தார் என்ற கேள்வி எனக்கு ரொம்ப நாட்களாக இருந்திருக்கிறது. ஆனால் அவரிடம் கேட்டதே இல்லை. அவர் மற்றவர்களிடம் சொல்லி, இதனால் தான் நான் சூரியை தேர்ந்தெடுத்தேன் என சொன்னதாக நான் கேள்விப்பட்டேன். இதுதான் என நான் நினைத்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை அது தானா இல்லை உங்களிடம் வேறு ஏதேனும் சொல்லி இருக்கிறாரா என்பது எனக்கு தெரியவில்லை.” என்றார். தொடரந்து அவரிடம், “என்ன சொன்னார் சொல்லுங்கள்?” என கேட்க, “அவரிடம் ஒரு அப்பாவித்தனம் இருக்கிறது. அது எனக்கு தேவைப்பட்டது என இயக்குனர் வெற்றிமாறன் கூறியதாக கேள்விப்பட்டேன். இதை நான் அவரிடம் இன்னும் கேட்கவில்லை அவருடைய நண்பர் சக இயக்குனரிடம் சொல்லி அது என் காதுக்கு வந்தது.” என்றார். தொடர்ந்து அவரிடம், “ஆமாம் அது தான் சொன்னார்… இது ஒரு திறமை தான் இல்லையா இப்படி நடித்துக் கொண்டிருந்த ஒருவரை எடுத்து சவாலான ஒரு கதாபாத்திரத்தில் வைத்து பார்ப்பதும் ஒரு திறமை தான் அல்லவா?” எனக் கேட்டபோது, "உண்மை உண்மை சார் அவர் இருக்கும் இடத்தில் இருந்து, நீங்கள் சொல்வது போல ஒரு பெரிய கூட்டத்திற்கு முன்பு எல்லாரும் முன்வந்து நிற்கும்போது எல்லாரையும் விளக்கி விட்டு விட்டு, “அது யாரது அந்த பச்சை சட்டை போட்டிருப்பது ஏய் தம்பி உன்னை தானப்பா " என்றால் அவன் வேறு எங்கோ திரும்பி பார்ப்பான். "நீ தான்டா இங்கே வா வா” இப்படி கூப்பிட்டால் எப்படி இருக்கும். அந்த மாதிரி தான் இப்போது வரைக்கும் எனக்கு ஆச்சரியமாக தான் இருக்கிறது” என பதில் அளித்துள்ளார். சூரியின் அந்த முழு பேட்டி இதோ…
 

சினிமா

"வீடியோ கேமரா இருந்தா விமர்சனம் பண்ணலாம்னு நினைக்கிறாங்க"- விமர்சனங்களுக்கு எதிரான கோபம் குறித்து பதிலளித்த சூரி! வீடியோ இதோ

'இது ரொம்ப CHEAP!'- சக நடிகர்களோடு தொடர்புபடுத்தி பரவிய வதந்திகளுக்கு தரமான பதிலடி கொடுத்த வாணி போஜன்! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

'இது ரொம்ப CHEAP!'- சக நடிகர்களோடு தொடர்புபடுத்தி பரவிய வதந்திகளுக்கு தரமான பதிலடி கொடுத்த வாணி போஜன்! ட்ரெண்டிங் வீடியோ

நெருக்கமாக நடித்தால் தவறாக மதிப்பிடுகிறார்கள்!- INTIMACY காட்சிகள் பற்றி பொன்னியின் செல்வன் நாயகி சோபிதாவின் பளிச் பதில்! வைரல் வீடியோ
சினிமா

நெருக்கமாக நடித்தால் தவறாக மதிப்பிடுகிறார்கள்!- INTIMACY காட்சிகள் பற்றி பொன்னியின் செல்வன் நாயகி சோபிதாவின் பளிச் பதில்! வைரல் வீடியோ