விடுதலை படத்தை தொடர்ந்து மீண்டும் ஹீரோவாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்கும் சூரி... புதிய பட அட்டகாசமான அறிவிப்பு இதோ!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவாக மீண்டும் களமிறங்கும் சூரி,soori next movie with sivakarthikeyan kottukakaali ps vinothraj | Galatta

நகைச்சுவை நடிகராக ரசிகர்களின் மனதை கவர்ந்த தமிழ் சினிமாவின் மிக முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்த சூரி தற்போது விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தமிழ் திரையுலகின் ஆகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள விடுதலை திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி இரண்டு பாகங்களாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் விடுதலை திரைப்படத்தை ஆர் எஸ் இன்ஃபோடைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார். R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள விடுதலை பாகம் 1 திரைப்படம் வெகு விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து விடுதலை படத்திற்கு பிறகு மீண்டும் மற்றொரு புதிய திரைப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து உலக அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த கூழாங்கல் திரைப்படத்தின் இயக்குனர் PS.வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த புதிய திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இறுதிக்கட்டத்தில் இருக்கும் மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் நிறைவடைந்து இறுதி கட்ட VFX பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இந்த 2023 கோடை விடுமுறையின் கொண்டாட்டமாக அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தனது சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தரமான திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அடுத்து தயாராகும் திரைப்படம் கொட்டுக்காளி. கூழாங்கல் திரைப்படத்தின் இயக்குனர் PS.வினோத் ராஜ் இயக்கத்தில் தயாராகும் கொட்டுக்காளி திரைப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க, மலையாள சினிமாவின் பிரபல இளம் நடிகை அனா பென் கதாநாயகியாக நடிக்கிறார். B.சக்திவேல் ஒளிப்பதிவில், கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்யும் கொட்டுக்காளி திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயனுடன், தயாரிப்பாளர் கலை அரசு அவர்கள் இணைந்து தயாரிக்கிறார். இந்நிலையில் கொட்டுக்காளை திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கொட்டுக்காளி திரைப்படத்தை அறிவிக்கும் வகையில் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

Extremely happy to announce our @SKProdOffl's next film with the highly talented and award winning filmaker @PsVinothraj.

Starring my dearest @sooriofficial annan & an incredible performer @benanna_love.

Here's the firstlook of #Kottukkaali. pic.twitter.com/nM6jYrVSB8

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) March 10, 2023

சினிமா

"உலகநாயகன் கமல் ஹாசனுடன் கைகோர்க்கும் சிலம்பரசன்TR!"- STR48 இயக்குனர் இவர் தான்... அட்டகாசமான அறிவிப்போடு வந்த மிரட்டலான வீடியோ இதோ!

உடல் நலக்குறைவால் வாடும் பிதாமகன் பட தயாரிப்பாளருக்கு உதவிக்கரம் நீட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! விவரம் உள்ளே
சினிமா

உடல் நலக்குறைவால் வாடும் பிதாமகன் பட தயாரிப்பாளருக்கு உதவிக்கரம் நீட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! விவரம் உள்ளே

சினிமா

"கதை சொல்ல ஆரம்பிக்கும் போதே OK சொன்னேன்!"- லோகேஷ் கனகராஜ் உடன் முதல் சந்திப்பு குறித்து மனம் திறந்த சார்லி! வீடியோ உள்ளே