சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற குனிட் மோங்கா துணை தயாரிப்பாளராக பணிபுரிகிறார். நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

sooraraipottru

ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் படத்தின் டீஸர் மற்றும் மாறா தீம் பாடல் வெளியாகி சக்கை போடு போட்டது. 

sooraraipottru

படத்தின் இரண்டாம் பாடலான வெய்யோன்சில்லி பாடல் வரும் 13-ம் தேதியான நாளை ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வெளியாகவுள்ளது. ஹரீஷ் சிவராமகிருஷ்ணன் பாடியுள்ள இந்த பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் இந்த படத்திற்கு பிராண்டிங் செய்கிறது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டரான அஜய் சிங், சூரரைப் போற்று போஸ்டரை வெளியிடவுள்ளார்.