சூரரைப் போற்று பட ட்ரைலர் குறித்து சூர்யா வெளியிட்ட வீடியோ !
By Sakthi Priyan | Galatta | October 25, 2020 09:17 AM IST

2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் செய்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. படத்தின் பின்னணி இசையின் மேக்கிங் வீடியோவை சில நாட்கள் முன்பு வெளியிட்டார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் ட்ரெண்ட் செய்தனர் சூர்யா ரசிகர்கள். பயோபிக் என்பதால் பின்னணி இசையின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய முன்தினம் படத்தின் புதிய பாடலான ஆகாசம் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. கிரிஸ்டின் ஜாஸ் மற்றும் கோவிந்த் வசந்தா பாடியுள்ள இந்த பாடல் வரிகளை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். இந்த பாடல் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
படத்தில் விமானப்படை விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விமானப்படையிடம் இருந்து NOC கிடைப்பதில் தான் தாமதம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அது கிடைத்துவிட்டது. இதையடுத்து படத்தை வரும் நவம்பர் மாதம் 12ம் தேதி அமேசான் பிரைமில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், தற்போது சூர்யா, தனது வாடிவாசல் படத்திற்கான நியூ லுக்கில் வீடியோ வெளியிட்டு, சூரரைப் போற்று படத்தின் டிரைலர் வரும் அக்டோபர் 26ம் தேதி விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு காலை 10 மணிக்கு அமேசான் பிரைமில் வருகிறது என்கிற சூப்பரான அப்டேட்டை கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார். சூர்யாவின் தரிசனம் கிடைத்ததே ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கல் தான்.
பேப்பரில் ராக்கெட்டை செய்த படியே, ஆங்கிலத்தில் சூரரைப் போற்று படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் ரிலீஸ் ஆவது மட்டுமின்றி, 200 நாடுகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருப்பதால், சூர்யா ஆங்கிலத்தில் ஒரே வீடியோவாக பேசி வெளியிட்டு இருக்கிறார்.
The wait is over! Trailer out on Oct 26, 10 AM ✈️
— Suriya Sivakumar (@Suriya_offl) October 24, 2020
Here’s the premiere link, set your reminder!https://t.co/lT6tUzrwnC#SooraraiPottruOnPrime @PrimeVideoIN #SudhaKongara @gvprakash @Aparnabala2@nikethbommi @deepakbhojraj @2D_ENTPVTLTD @rajsekarpandian @guneetm @SonyMusicSouth pic.twitter.com/xHrfdW1cYB
SURPRISE: Samantha in Bigg Boss 4 - New Trending Promo Video here! Don't Miss!
25/10/2020 09:18 AM
Suriya's Soorarai Pottru Trailer Announcement Video - exciting treat for fans!
25/10/2020 08:34 AM
Sanam-Suresh fight: Kamal questions housemates | Exciting Bigg Boss 4 new Promo
24/10/2020 04:05 PM