இசையமைப்பாளரின் லேட்டஸ்ட் பதிவு இறுதிசுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் படம் சூரரைப் போற்று. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற குனிட் மோங்கா துணை தயாரிப்பாளராக பணிபுரிகிறார்.

sooraraipottru

நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் நடிகர் சூர்யா பாடல் பாடியுள்ளார் என்பது சமீபத்தில் தெரியவந்தது.

gvprakashkumar

படத்தில் இடம்பெற்றுள்ள மாறா தீம் பாடலுக்கு சூர்யா தான் ராப் பகுதி பாடுகிறார். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், தெலுங்கிலும் சூர்யா தான் ராப் பகுதி பாடியுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பதிவு செய்துள்ளார்.