சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

Soorarai Pottru Next Two Songs Update By Suriya

ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். படத்தின் மாறா தீம் பாடல் மற்றும் வெய்யோன் சில்லி பாடல்கள் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. 

Soorarai Pottru Next Two Songs Update By Suriya

படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் ரசிகர்களுக்காக லைவ்வில் வந்த சூர்யா, படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகவுள்ளது என்ற ருசிகர அப்டேட்டை தெரிவித்தார். சரியான நேரத்தில் அந்த பாடல்கள் வெளியாகும். இந்த படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று ஆவலோடு காத்திருக்கிறேன் என்று கூறினார் சூர்யா.