துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பொங்கல் விருந்தாய் வெளியான திரைப்படம் பட்டாஸ். இத்திரைப்படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இணைந்து இசையமைத்தனர். KPY சதீஷ் நகைச்சுவையில் தனுஷுடன் இணைந்து பட்டையை கிளப்பினார். 

pattas

தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சினேகா மற்றும் மெஹ்ரீன் பிர்ஸாடா ஆகியோர் நடித்திருந்தனர். எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி போன்ற அசத்தலான படைப்புக்களை தந்தவர் இந்த படத்திலும் சீரான கதைக்கருவுடன் அசத்தியுள்ளார். பாடல்கள் சில் ப்ரோ, ஜிகிடி கில்லாடி, முரட்டு தமிழன் டா, மவனே போன்ற பாடல்கள் ஹிட் அடித்தது. படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் தொலைக்காட்சி வாங்கியது. வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 6.5 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியானது. தற்போது இரண்டாம் நாளில் 5.5 கோடி வசூல் செய்துள்ளது. 

sneha

தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான அடிமுறையை நடிகை சினேகா பயிற்சிக்கும் விடீயோவை வெளியிட்டது சத்யஜோதி ஃபிலிம்ஸ். கேரக்டருக்காக முறையாக பயிற்சி செய்யும் சினேகாவின் உழைப்பு பாராட்டிற்குரியது.