உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர்.

SK Seemaraja Social Distancing Tiruppur Collector

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இருப்பினும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் வெளியே வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.அப்போதும் அவர்களை வைரஸ் தொற்றாத அளவுக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கிருமி நீக்கும் சுரங்கம் ஒன்றை தாராபுரம் சந்தையின் வாசலில் வைத்துள்ளார்.

SK Seemaraja Social Distancing Tiruppur Collector

இதனை பலரும் பாராட்டி வருகின்றனர்.தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் இந்த செயலை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.அதற்கு பதிலளித்த விஜய்கார்த்திகேயன் சிவகார்த்திகேயனின் சீமராஜா வசனத்தை எடுத்துக்கூறி சோசியல் டிஸ்டன்சிங் குறித்து பதிவிட்டார்.இதற்கு டைரக்டர் தான் கரணம் இரண்டே வரியில் சோசியல் டிஸ்டன்சிங் குறித்து தெரிவித்துள்ளார் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.