வெங்கட் பிரபு மற்றும் STR இணைந்து பணியாற்றும் திரைப்படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில் SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். 

maanaadu maanaadu

சென்னை VGP கோல்டன் கடற்கரையில் செட் அமைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த படப்பிடிப்பில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஹைதராபாத் விரைந்துள்ளனர் படக்குழுவினர். 

sjsurya

தற்போது படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. வெளியான புகைப்படத்தில் STR உடன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர்கள் SJ சூர்யா, மனோஜ் ஆகியோர் உள்ளனர். போலீஸ் உடையில் மனோஜ் இருப்பது தெரியவந்தது. நடிகர் SJ சூர்யாவின் பெல்ட், காவல் அதிகாரிகள் பயன்படுத்தும் பெல்ட் போல் இருப்பதால் அவரும் போலீஸாக நடிக்கக்கூடும் என்பதை ரசிகர்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது நம் கலாட்டா.