SJசூர்யா - பிரியா பவானி சங்கரின் பொம்மை... மான்ஸ்டர் வெற்றி கூட்டணியின் அசத்தலான இந்த காதலில் வீடியோ பாடல் இதோ!

SJசூர்யா-பிரியா பவானி சங்கரின் பொம்மை பட இந்த காதலில் வீடியோ பாடல்,Sj suryah priya bhavani shankar in bommai movie indha kadhalil video song | Galatta

மான்ஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் SJ.சூர்யா - பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்த பொம்மை திரைப்படத்தின் “இந்த காதலில்” வீடியோ பாடல் வெளியானது. அஜித் குமாரின் வாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பிறகு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பிளாக்பஸ்டர் ஹிட்டான குஷி படத்தை இயக்கிய SJ.சூர்யா தொடர்ந்து நியூ, அன்பே ஆருயிரே மற்றும் இசை ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து இயக்கி இருந்தார். பின்னர் நடிகராக தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் பலவிதமான கதாபாத்திரங்களில் ஹீரோ - வில்லன் என எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் மிகச் சிறப்பாக நடைபெற்று ரசிகர்களின் மனதை கவர்ந்து வருபவர் நடிகர் SJ.சூர்யா. 

அந்த வகையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இறைவி, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர், தளபதி விஜய் நடிப்பில் மெர்சல், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன்.TR நடித்த மாநாடு, சிவகார்த்திகேயனின் டான் என சவாலான கதாபாத்திரங்களை SJ.சூர்யா தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த வரிசையில் அடுத்ததாக விஷாலுடன் இணைந்து வித்தியாசமான டைம் டிராவல் கேங்ஸ்டர் படமாக தயாராகி இருக்கும் மார்க் ஆண்டனி, பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்க உருவாகி வரும் கேம் சேஞ்சர் ஆகிய திரைப்படங்களில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து மீண்டும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்த SJ.சூர்யா ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் இந்த தீபாவளி வெளியிட ரிலீஸாக இருக்கிறது. 

இதனிடையே SJ.சூர்யா நடிப்பில் நீண்ட காலமாக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த திரைப்படம் தான் பொம்மை. மொழி மற்றும் அபியும் நானும் உட்பட பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் ராதா மோகன் பொம்மை படத்தை எழுதி இயக்கியுள்ளார். மான்ஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு SJ.சூர்யா & பிரியா பவானி சங்கர் இருவரும்  மீண்டும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பொம்மை திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவில், அண்தோனி படத்தொகுப்பு செய்துள்ள பொம்மை திரைப்படத்தின் பாடல்களை பாடலாசிரியர் கார்க்கி எழுதியுள்ளார். டாக்டர் V.மருது பாண்டியன், டாக்டர் ஜாஸ்மின் சந்தோஷ், மற்றும் டாக்டர் தீபா.T.துரை ஆகியோரது தயாரிப்பில் ஏஞ்சல் ஸ்டுடியோ சார்பில் SJ.சூர்யா அவர்கள் வழங்கும் பொம்மை திரைப்படம் வரும் ஜூன் 16ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் பொம்மை திரைப்படத்தின் இந்த காதலில் வீடியோ பாடல் தற்போது வெளியானது.  யுவனின் இசையில் நடிகை ஆண்ட்ரியா மற்றும் அஸ்லாம் இணைந்து பாடலை பாடி இருக்கின்றனர்.  ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ரொமான்டிக்கான இந்த காதலில் வீடியோ பாடல் இதோ…
 

புதிய படத்தை பூஜையுடன் தொடங்கிய விக்ரம் பிரபு... வைரலாகும் படப்பூஜை புகைப்படங்கள் இதோ!
சினிமா

புதிய படத்தை பூஜையுடன் தொடங்கிய விக்ரம் பிரபு... வைரலாகும் படப்பூஜை புகைப்படங்கள் இதோ!

SJசூர்யாவின் பொம்மை படத்திற்காக ஒன்றிணைந்த லோகேஷ் கனகராஜ் - பிரதீப் ரங்கநாதன்... காரணம் என்ன? ட்ரெண்டிங் வீடியோ இதோ
சினிமா

SJசூர்யாவின் பொம்மை படத்திற்காக ஒன்றிணைந்த லோகேஷ் கனகராஜ் - பிரதீப் ரங்கநாதன்... காரணம் என்ன? ட்ரெண்டிங் வீடியோ இதோ

10 - 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு தளபதி விஜய் வழங்கும் ஊக்கத்தொகை… எங்கே..? எப்போது..?- முழு விவரம் இதோ
சினிமா

10 - 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு தளபதி விஜய் வழங்கும் ஊக்கத்தொகை… எங்கே..? எப்போது..?- முழு விவரம் இதோ