இயக்குனராக தனது பயணத்தை தொடங்கி தற்போது நடிகராக தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி வருபவர் SJ சூர்யா.விஜய்,மகேஷ்பாபு என பெரிய நடிகர்களுக்கு வில்லனாக இருந்தாலும் சரி, மான்ஸ்டர் போன்ற படத்தில் ஹீரோவாக நடிப்பதாக இருந்தாலும் சரி தனது நடிப்பால் நம்மை கவர்கிறார்.

SJ Surya Monster

இவரது நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை,இறவாக்காலம் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.இதனை தவிர உயர்ந்த மனிதன் படத்திலும் நடித்து வருகிறார்.தற்போது இவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

SJ Suryah

மொழி,பயணம்,காற்றின் மொழி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதாமோகன் இயக்கும் புதிய படத்தில் SJ சூர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் நெருங்கிய வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jyothika Kaatrin Mozhi

Radha Mohan to Direct SJ Suryah