இயக்குனராக தமிழ் திரையுலகில் கவனிக்க வைக்கும் படைப்புகளை வழங்கி தற்போது நடிகராக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள SJ.சூர்யா அவர்கள் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து உயர்ந்த மனிதன் திரைப்படத்திலும் நடிக்கிறார்.

முன்னதாக இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் SJ.சூர்யா நடித்துள்ள பொம்மை திரைப்படம் நிறைவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கிறது. மேலும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் ராம்சரண் நடிப்பில் தயாராகும் RC15 திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக SJ.சூர்யா நடித்து வருகிறார். இதனிடையே முதல் முறையாக வெப்சீரிஸில் களமிறங்கியிருக்கும் SJ.சூர்யா, நடிப்பில் தயாராகியுள்ள வெப்சீரிஸ் வதந்தி.

விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி இருவரும் இணைந்து தயாரிக்க, கொலைகாரன் படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள வதந்தி - The Fable of velonie எனும் வெப் சீரிஸில் SJ.சூர்யாவுடன் இணைந்து லைலா, நாசர், விவேக் பிரசன்னா, குமரன் மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளிலும் வருகிற டிசம்பர் 2-ம் தேதி முதல் வதந்தி வெப்சீரிஸ் அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்நிலையில் SJ.சூர்யாவின் வதந்தி வெப்சீரிஸின் மிரட்டலான ட்ரெய்லர் சற்று முன்பு வெளியாகி சமூக வலைத்தளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அட்டகாசமான வதந்தி ட்ரெய்லர் இதோ…