இயக்குனர் & நடிகர் என தொடர்ந்து தமிழ் திரை உலகில் சிறந்த கலைஞராக வலம் வரும் S.J.சூர்யா தற்போது வெப்சீரிஸிலும் களமிறங்கியுள்ளார். விரைவில் அமேசான் பிரைம் வீடியோவில் க்ரைம் த்ரில்லர் வெப்சீரிஸாக வெளிவரவுள்ள வதந்தி வெப் சீரிஸில் S.J.சூர்யா காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் மிரட்டலான கதாப்பாத்திரத்தில் S.J.சூர்யா நடிக்கிறார். மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு நேற்று (மே 5)  பூஜையுடன் தொடங்கியது.முன்னதாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து S.J.சூர்யா நடித்துள்ள டான் திரைப்படம் வருகிற மே 13-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலரிலீஸ்ஸாகவுள்ளது.

தொடர்ந்து இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து உயர்ந்த மனிதன் என S.J.சூர்யா நடித்துள்ள திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் முன்னதாக இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் SJ.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் கடமையை செய். 

யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ள கடமையை செய் படத்தை கணேஷ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நஹர் பிலிம்ஸ் இணைந்து வழங்க, வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவில், அருண்ராஜ் இசையமைத்துள்ளார். சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடும் கடமையை செய் திரைப்படம் வருகிற மே மாதம் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடமையை செய் படத்தின் அதிகாரபூர்வ ட்ரைலர் தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள கடமையை செய் திரைப்படத்தின் ட்ரைலர் இதோ…