தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக குறிப்பிடப்படும் திரைப்படங்களை வழங்கிய இயக்குனர் SJ.சூர்யா தனது முதல் இரண்டு படங்களில் அஜித் குமார் மற்றும் தளபதி விஜய் இருவரையும் இயக்கினார். பின்னர் நடிகராகவும் தொடர்ந்து பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் ராதா மோகன் இயக்கத்தில் சூர்யா நடித்த பொம்மை திரைப்படம் நிறைவடைந்து ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

அடுத்தடுத்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரனுடன் இணைந்து RC15 இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து மார்க் ஆண்டனி மற்றும் அமிதாப் பச்சனுடன் இணைந்து உயர்ந்த மனிதன் உள்ளிட்ட படங்களில் SJ.சூர்யா நடித்து வருகிறார். முன்னதாக SJ.சூர்யாவின் முதல் வெப் சீரிஸான வதந்தி வருகிற டிசம்பர் 2ம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாக உள்ளது.

விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி இருவரும் இணைந்து தயாரிக்க, கொலைகாரன் படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள வதந்தி - The Fable of velonie எனும் வெப் சீரிஸில் SJ.சூர்யாவுடன் இணைந்து லைலா, நாசர், விவேக் பிரசன்னா, குமரன் மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளிவரும் வதந்தி வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று(நவம்பர் 22) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட SJ.சூர்யா பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது மீண்டும் தளபதி விஜய் மற்றும் நடிகர் அஜித்குமார் ஆகியவரை இயக்கும் வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்தார்.

“நான் என்னை வைத்து இயக்கும் திரைப்படங்களுக்கே எனக்கு நேரம் இருப்பதில்லை… பார்ப்போம்! இறைவன் ஏதாவது அப்படி அமைத்தால் நல்லதே நடக்கட்டும்.” என பதில் அளித்துள்ளார். தனது இசை படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் கில்லர் எனும் திரைப்படத்தை அடுத்த ஆண்டு(2023) SJ.சூர்யா இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.