தமிழில் வாலி, குஷி திரைப்படங்களின் மூலம் இயக்குனராக பிரபலமடைந்த இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நியூ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.இதைத்தொடர்ந்து  தமிழில் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த மெர்சல் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் மிரட்டியிருந்தார்.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா அஞ்சலி ,உள்ளிட்டோர் நடித்த இறைவி திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகராக அங்கீகரிக்கப்பட்ட நடிகர் எஸ்.ஜே.சூர்யா,கடைசியாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்து வெளிவந்த நெஞ்சம்மறப்பதில்லை திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. 

இந்நிலையில் நடிகர் எஸ் ஜே சூர்யாவின் புதிய திரைப்படமாக உருவாகிவருகிறது பொம்மை. தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ராதாமோகன் இயக்கும் பொம்மை திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள பொம்மை திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பிய ரசிகைக்கு பதிலளித்துள்ள நடிகர் எஸ்.ஜே.சூர்யா "விரைவில்… இந்த லாக்டௌன்  ஜூலையோடு முடிவடையும் என நம்புவோம்... ஜூலையில் பொம்மை படத்தின் டிரைலர் வெளியாகும்… தேதி நேரம் யார் வெளியிடுகிறார்கள் என்ற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்!" தெரிவித்துள்ளார். ட்விட்டரில் ரசிகை எழுப்பிய கேள்விக்கு நடிகர் எஸ்.ஜே.சூர்யா கொடுத்துள்ள இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.