நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிகை சிம்ரன் உடன் இணைந்து நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் வாலி. இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் SJ.சூர்யா. அடுத்து தளபதி விஜய் மற்றும் ஜோதிகாவை இணைத்து அவர் எடுத்த திரைப்படமான குஷி மெகா ஹிட்டானது. தேவாவின் இசையில் அனைத்துப் பாடல்களும்  ரிப்பீட் மோடில் ஒலித்த காலம் அது. 

இத்திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் முன்னணி கதாபாத்திரமாக நடித்திருந்த தளபதி விஜய் மற்றும் ஜோதிகா  இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையிலான அழகான காதலும் கர்வமும். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் ஒவ்வொரு காட்சியிலும் இருவரும் அவ்வளவு அழகாக  நடித்திருந்தனர். குஷி படத்தில் இருக்கும் விஜய் ஜோதிகா இடையிலான கெமிஸ்ட்ரி  ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 

தற்போது இயக்குனர் S.J.சூர்யா, இயக்குனர் ராதாமோகனின் இயக்கத்தில் தயாராகியுள்ள பொம்மை திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் உடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் S.J.சூர்யாவின் ட்விட்டர் பக்கத்தில் குஷி திரைப்படத்தில் விஜய் ஜோதிகா இடையிலான கெமிஸ்ட்ரியை மேற்கோள்காட்டி அதேபோல் பொம்மை திரைப்படத்தில் S.J.சூர்யா பிரியா பவானி சங்கர் இடையிலான கெமிஸ்ட்ரி எவ்வாறு இருக்கும் என  ஆவலாக இருப்பதாக தெரிவிக்க  S.J.சூர்யா அந்த ரசிகருக்கு பதிலளிக்கும் விதமாக கட்டாயமாக  நாங்கள் இணைந்து நடித்துள்ள காட்சிகள் நீங்கள் ரசிக்கும் படி இருக்கும் என பதிலளித்துள்ளார்.

ட்விட்டரில் ரசிகர் எழுப்பிய கேள்விக்கு S.J.சூர்யா பதில் அளித்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ராதாமோகன் இயக்கத்தில் S.J.சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் பொம்மை திரைப்படத்திற்கு அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.