சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ரொமான்டிக் பாடல் வீடியோ !
By Sakthi Priyan | Galatta | September 05, 2019 17:18 PM IST

பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சசி அடுத்ததாக இயக்கி வரும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை.இந்த படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் மற்றும் சித்தார்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.
அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் சித்தார்த் டிராபிக் போலீஸாகவும், ஜீ.வி.பிரகாஷ் பைக் ரேஸராகவும் நடித்துளள்னர் என்ற தகவல் கிடைத்துளளது. இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. செப்டம்பர் 6-ம் தேதியான நாளை வெளியாகவுள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் திரை விரும்பிகள்.
தற்போது மயிலாஞ்சி பாடல் வீடியோ வெளியானது. ஆனந்த் அரவிந்தக்ஷன் மற்றும் சாஷா திருப்பதி பாடியுள்ளனர். தமயந்தி பாடல் வரிகளை எழுதியுள்ளார்.