தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தளபதி விஜய்.தனது எண்டெர்டைனிங் படங்கள் மூலம் உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை பெற்றுள்ளார் விஜய்.இவர் நடித்த பீஸ்ட் படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய்.20 வருடங்களுக்கு மேலாக தனது விடாமுயற்சியால் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள இவர் தனது 48ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.இவரது பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு படத்தின் அப்டேட்கள் வந்துகொண்டு இருக்கின்றன.

பிரபலங்கள் நடிகர்கள் என பலரின் மனம் கவர்ந்த இவர் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.உலகம் முழுவதும் இருக்கும் பலரும் தங்கள் வாழ்த்துக்களை விஜய்க்கு தெரிவித்து வருகின்றனர்.தற்போது நடிகர் சிவகார்திகேயன் அவரது பிறந்தநாள் வாழ்த்துக்களை விஜய்க்கு தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் விஜயின் பீஸ்ட் ஷூட்டிங்கும்,சிவகார்த்திகேயனின் டான் ஷூட்டிங்கும் ஒரே இடத்தில நடைபெற்று வந்தது.அங்கு விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சிவகார்த்திகேயன் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து , வாரிசு படத்திற்காக வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.