சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13ஆம் தேதி வெளியாகி திரையரங்குங்களில் வெற்றிநடை போட்டு வரும் திரைப்படம் டான்.கல்லூரி மாணவன் தன் கனவை நோக்கி எடுத்து வைக்கும் படிகள் குறித்து ஜாலியாகவும் எமோஷனல் ஆகவும் தெரிவித்துள்ளது இந்த படம்.

ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று பாராட்டுகளை அள்ளி வருகிறது இந்த படம்.லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.

அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.ப்ரியங்கா மோகன் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.எஸ் ஜே சூர்யா,சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.பல இடங்களில் இந்த படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.இந்த படம் தெலுங்கிலும் காலேஜ் டான் என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற தெலுங்கு பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் படத்தின் வெற்றிக்காக ரசிகர்களிடம் நன்றி தெரிவித்தனர்.அடுத்ததாக தெலுங்கானாவில் உள்ள AMB சினிமாஸ் திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து சிவகார்த்திகேயன் படம் பார்த்து ரசித்துள்ளார்,இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைராலகி வருகின்றன.