தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் துவங்கி இன்று கோலிவுட்டின் நட்சத்திரமாய் ஜொலிப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆறிலிருந்து அறுபது வரை என அனைத்து தரப்பு ரசிகர்களையும் தனது நடிப்பால் ஈர்த்து SKவாக திகழ்கிறார். நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த காலத்திலே பலருக்கும் ஹீரோவாக திகழ்ந்த சிவகார்திகேயன், ஹீரோவாகி பல வெற்றி திரைப்படங்களை தந்துள்ளார். தற்போது டாக்டர் மற்றும் அயலான் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தில் SK ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் அறிமுகமாகிறார். வினய், யோகிபாபு ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்த டாக்டர் படத்தின் செல்லம்மா என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலின் வரிகள் இன்றைய இளைஞர்களை கவரும் விதமாக அமைந்தது. டிக்டாக் பேன் செய்த நேரத்தில் சரியாக வந்து அமைந்தது இந்த பாடல். 

இதனை தொடர்ந்து வெளியான இந்த படத்தின் இரண்டாவது பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி ஸ்பெஷலாக படத்திலிருந்து இரண்டு போஸ்டர்கள் வெளியானது. இந்த படம் 2021 கோடை விடுமுறைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பும் அதில் இருந்தது. 

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டு போட வந்த சிவகார்த்திகேயனிடம் பத்திரிக்கையாளர்கள் உரையாடினார். ஓடிடி தளங்கள் குறித்து பேசிய சிவகார்த்திகேயன், ஓடிடி-யில் படம் ரிலீஸ் செய்வது தயாரிப்பாளர்களின் விருப்பம் என தெரிவித்தார். மேலும் டாக்டர் படத்தின் ஒரு பாடல் காட்சி மட்டும் மீதம் உள்ளது. அதை படமாக்கவிருப்பதாக தெரிவித்தார். சண்டை காட்சிகள், கடினமான காட்சிகளை லாக்டவுனுக்கு முன்னரே படமாக்கிவிட்டதாக தெரிவித்தார். அரசு அறிவித்தபடி பாதுகாப்பான முறையில் படப்பிடிப்பை நடத்தி வருவதாக கூறினார் சிவகார்த்திகேயன். 

டாக்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் அயலான் படத்தில் நடித்து  வருகிறார் SK. ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். 24AM ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. கருணாகரன், இஷா கோபிகர், பாலசரவணன் ஆகியோர் உள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.