கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை கட்டுக்குள் கொண்டுவர அரசாங்கமும்,அரசு அதிகாரிகளும்,மருத்துவத்துறை சேர்ந்த நண்பர்கள் பலரும் பெரிதும் போராடி வருகின்றனர்.

Sivakarthikeyan Supports Doctors Corona Lockdown

கொரோனா தொற்று ஏற்பட்டு ஒரு மருத்துவர் உயிரிழந்து அவரது உடலை சிலர் அடக்கம் செய்யவிடாமல் செய்த சம்பவம் பலரிடமும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனை தொடர்ந்து மருத்துவர்களின் போராட்டம்,வாபஸ் என்று கடந்த சில நாட்களாக அவர்களுக்கு மனஉளைச்சல் அதிகமாக இருந்துள்ளது.

Sivakarthikeyan Supports Doctors Corona Lockdown

அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது வீடியோ 
ஒன்றை வெளியிட்டுள்ளார் நாம் அனைவரும் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக தங்கள் வீடு,குடும்பம் அனைத்தையும் விட்டுவிட்டு சேவையை செய்துவரும் டாக்டர்கள் அனைவர்க்கும் சல்யூட்.கடந்த சில நாட்களாக அவர்களுக்கு கடினமான நேரமாக இருந்து வருகிறது.இந்த நேரத்தில் நாம் அனைவரும் அவர்கள் பக்கத்தில் இருக்கிறோம் என்பதை காட்டுவோம் என்று தெரிவித்துள்ளார்.