சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் SK-14.இந்த படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார்.இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.24AM Studios இந்த படத்தை தயாரிக்கிறது.

Sivakarthikeyan SK 14 Change Hands KJR Studios

யோகி பாபு,கருணாகரன்,ஈஷா கோபிகர்,பாலசரவணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இந்த படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்தது.சிவகார்த்திகேயன் தற்போது PS மித்ரன் இயக்கும் ஹீரோ படத்தில் நடித்துவருகிறார்.

Sivakarthikeyan SK 14 Change Hands KJR Studios

பல நாட்களாக இழுபறியில் இருக்கும் SK 14 படம் 24AM ஸ்டுடியோஸிடம் இருந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தினை தயாரித்து வரும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.ஹீரோ படத்தின் வேலைகள் நிறைவடைந்தபின் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sivakarthikeyan SK 14 Change Hands KJR Studios