TRP-யில் கலக்கிய சிவகார்த்திகேயன் படம்...விவரம் உள்ளே !
By Aravind Selvam | Galatta | January 15, 2021 16:23 PM IST

TRP மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் கணக்கை வைத்து BARC நிறுவனம் வாராவாரம் நாடுமுழுவதும் வெளியிட்டு வருவார்கள்.மக்கள் மத்தியில் ஒரு நிகழ்ச்சி பிரபலமாக உள்ளதாக இல்லையா என்பதை இதனை வைத்து தான் தெரிந்துகொள்ள முடியும் அதன் அடிப்படையில் புதிய தொடர்களும் நிகழ்ச்சிகளும் ஒளிர்ப்படும்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன.சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் மூடப்பட்டு சினிமா,சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் கடந்த சில மாதங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளன.சில இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டன,ஷூட்டிங்குகள் ஆரம்பித்தன.
மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்ததாலும்,ஷூட்டிங்குகள் நடைபெறாததாலும் ஹிட்டான தொடர்களையும்,படங்களையும் டிவி சேனல்கள் போட்டி போட்டு ஒளிபரப்பி வந்தனர்.ஒளிபரப்பாகி வந்த விறுவிறுப்பான தொடர்களையும் முதலில் இருந்து ஒளிபரப்பி வருகின்றனர்.பலரும் இந்த தொடர்களையும்,நிகழ்ச்சிகளையும்,
சில மாதங்களுக்கு முன் ஷூட்டிங்குகள் தொடங்கி தற்போது சீரியல்களின் புதிய எபிசோடுகள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன.இருந்தாலும் பலரும் வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதால் சீரியல்களோடு சேர்ந்து மக்கள் ரசிக்கும்படியான நிகழ்ச்சிகளையும்,படங்களையும் ஒளிபரப்பி வருகின்றனர்.தற்போது ஓரளவு நிலைமை சரியாகி வந்தாலும் இன்னும் பலரும் வீட்டிலிருந்தே வேலை பார்த்து வருகின்றனர்,சீரியல்கள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன.
அதிகம் மக்களால் பார்க்கப்பட்ட தொடர்கள் மற்றும் படங்களின் லிஸ்டை BARC நிறுவனம் வாராவாரம் வெளியிட்டு வந்தனர்.கடந்த வாரத்திற்கான லிஸ்டை BARC தற்போது வெளியிட்டுள்ளது.2021-ன் முதல் வாரத்திற்கான முதல் TRP ரேட்டிங் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.சன் டிவியில் ஒளிபரப்பான சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது.அடுத்த மூன்று இடங்களில் ரோஜா,வானத்தை போல,பூவே உனக்காக சீரியல்கள் உள்ளன.ஐந்தாவது இடத்தில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடர் உள்ளது.
Congrats @Siva_Kartikeyan #Seemaraja holding no.1 in Rating pic.twitter.com/EE4NpwM1Q1
— TAMIL TV Express™ (@TamilTvExpress) January 14, 2021
Theatres screening Master and Eeswaran - Chennai Police's new order
15/01/2021 02:35 PM
Salaar Saga Begins: Prabhas and Yash at launch event | Prashanth Neel
15/01/2021 01:19 PM