தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக இவர் நடித்த டாக்டர் படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாருடன் அயலான்,டான் மற்றும் SK 20 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.இதில் டான் மற்றும் அயலான் திரைப்படங்கள் ஷூட்டிங் நிறைவடைந்து ரிலீஸுக்கு ரெடி ஆகி வருகின்றன.

படங்களில் நடிப்பது மட்டுமின்றி கனா,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா,வாழ் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன் இருந்துள்ளார்.இவற்றை தவிர சில படங்களில் பாடல்கள் எழுதியும் அசத்தியுள்ளார்.இவர் எழுதிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்துள்ளன.

சிவகார்த்திகேயன் ட்விட்டரிலும்,இன்ஸ்டாகிராமிலும் அவ்வப்போது ஆக்டிவ் ஆக இருப்பவர்.சினிமாவை தாண்டி தனக்காக ரசிகர்கள் எடுக்கும் சின்ன சின்ன முயற்சிகளான வித்தியாசமான வீடியோக்கள்,புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பகிர்வார்.அதோடு தன்னை சுற்றி நடக்கும் சமூகப்பிரச்னைகளுக்கும் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் பதிவிடுவார்.

தற்போது ட்விட்டரில் அதிகம் தொடரப்பட்ட தமிழ் நடிகர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார் சிவகார்த்திகேயன்.7 மில்லியன் ரசிகர்களை பெற்று இந்த சாதனையை இவர் நிகழ்த்தியுள்ளார்.இதனை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.