தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாருடன் அயலான்,கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.இந்த இரண்டு படங்களின் பர்ஸ்ட்லுக்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்குமே கொரோனவால் பாதிக்கப்பட்டுளள்து.

அயலான் மற்றும் டாக்டர் படங்களின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.சமீபத்தில் இவருடைய டாக்டர் படத்தின் முதல் பாடலான செல்லம்மா பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி செம வைரலாக இருந்து வருகிறது.இந்த பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் 2018-ல் வெளியான படம் சீமராஜா.வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினி முருகன் படங்களை இயக்கிய பொன்ராம் இந்த படத்தை இயக்கியிருந்தார்.சமந்தா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படம் கடந்த சனிக்கிழமை மாலை சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.இதனை பார்த்து பல ரசிகர்களும் தங்கள் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு சீமராஜாவாகவும்,கடம்பவேல் ராஜாவாகவும் மிக அழகாக காட்டியிருப்பார்கள் அவர் அணிந்திருக்கும் ஒவ்வொரு உடையும் மிகப்பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.இதற்கு பதிலளித்துள்ள சிவகார்த்திகேயன் சீமராஜா,ரெமோ இரண்டு படங்களிலும் என்னை மிகவும் அழகாக காட்டியது ஸ்டைலிஸ்ட் அணு பார்த்தசாரதி அவர்கள் தான்,அவரது கடின உழைப்பு தான் இதற்கு காரணம் என்று அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.சிவகார்த்திகேயனின் இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.