தொகுப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வளர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந்த படத்தினை சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும் இயக்குனருமான நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.

நடிகராக பெரிய வரவேற்பை பெற்றுள்ள சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர் என பல பரிமாணங்களையும் பெற்றுள்ளார்.இவர் முதலில் நெல்சன் இயக்கத்தில் தயாரான கோலமாவு கோகிலா படத்தில் தான் பாடல் எழுத தொடங்கினார் இந்த பாடல் பெரிய ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து கூர்கா,ஆதித்ய வர்மா உள்ளிட்ட படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.

இதனை தொடர்ந்து இவர் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் காந்தக்கண்ணழகி மற்றும் டாக்டர் படத்தில் செல்லம்மா,சோ பேபி உள்ளிட்ட பாடல்களை எழுதியுள்ளார் இந்த பாடல்கள் பெரிய ஹிட் அடித்தன.நெல்சன் அடுத்ததாக தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் பீஸ்ட் படத்தினை இயக்கி வருகிறார்.

நெல்சனின் இரண்டு படங்களிலும் பாடல் எழுதிய சிவகார்த்திகேயன் இந்த படத்திலும் பாடல் எழுதியுள்ளார் என்ற தகவல் பரவி வந்தது.கலாட்டாவிற்கு சிவகார்த்திகேயன் அளித்த பிரத்யேக பேட்டியில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இதனை முற்றிலும் மறுக்காத சிவகார்த்திகேயன் இருக்கலாம் என்று பதிலளித்துள்ளார்.

இதனால் இவர் இந்த படத்தில் பாடல் எழுதியிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.தளபதி விஜய் சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் இணைவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.