தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.நெல்சன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள டாக்டர் படம் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அடுத்ததாக இவர் நடித்துள்ள அயலான் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

அயலான் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.இவற்றை அடுத்து இவர் நடிக்கும் டான் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் ஹீரோயினாக டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் முக்கால்வாசி நிறைவடைந்து டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தினை தொடர்ந்து சில படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.

புதுமுக இயக்குனர் அசோக் இயக்கத்தில் தயாராகும் படம் மற்றும் தெலுங்கு இயக்குனர் அனுதீப்புடன் இணைந்து Bilingual படம் என இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார்.இதில் அசோக் இயக்கும் படத்தில் இரண்டுவேடங்களில் நடிக்கிறார் என்ற தகவலும் கிடைத்தது.

நேற்று தனது டாக்டர் படத்தினை விஜய் டிவி நட்சத்திரங்கள் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் கண்டுகளித்துள்ளனர்.இந்த தியேட்டருக்கு திடீர் விசிட் அடித்துள்ளார் சிவகார்த்திகேயன்,இதில் மீசை தாடியின்றி புது கெட்டப்பில் சிவகார்த்திகேயன் இருந்துள்ளார்,இது டான் படத்திற்காகவா அல்லது புதிய படத்திற்காகவா என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.