தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் துவங்கி இன்று கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாய் ஜொலிப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆறிலிருந்து அறுபது வரை என அனைத்து தரப்பு ரசிகர்களையும் தனது நடிப்பால் ஈர்த்து SKவாக திகழ்கிறார். நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த காலத்திலே பலருக்கும் ஹீரோவாக திகழ்ந்த சிவகார்திகேயன், ஹீரோவாகி பல வெற்றி திரைப்படங்களை தந்துள்ளார். தற்போது டாக்டர் மற்றும் அயலான் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்நிலையில் SK தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் கிளீன் ஷேவ் செய்து அசத்தலான லுக்கில் இருக்கும் சிவகார்த்திகேயனை பார்த்து பாராட்டி வருகின்றனர் அவரது ரசிகர்கள். ஒரு சிலர் திடீரென கிளீன் ஷேவ், ஒரு வேலை படத்தின் கெட்டப்பாக இருக்குமோ என்று யூகித்து வருகின்றனர். நிச்சயம் நண்பர்களின் கமெண்ட்ஸ் ஏதாவது இருக்கும் என்று தேடும் தருணத்தில், அடுத்து ஹிந்தி படமா ? என்று கமெண்ட் செய்திருந்தார் இயக்குனர் நெல்சன். நெல்சன் இந்த டயலாக்கை லீட் எடுத்து தர, இணையவாசிகள் SK-ன் பாலிவுட் என்ட்ரி என புகழாரம் சூட்ட துவங்கினர். 

இந்த புகைப்படத்தை பார்க்கையில் தொலைக்காட்சியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கிளீன் ஷேவில் என்ட்ரி தந்த சிவகார்த்திகேயன் நினைவில் வந்தார். 3 படத்தில் பள்ளி காட்சிகளில் வரும் சிவகார்த்திகேயன் கிளீன் ஷேவில் காணப்பட்டார். பின்னர் மான் கராத்தே, ரெமோ போன்ற படங்களில் கிளீன் ஷேவ் SKவுக்கு கச்சிதமாக பொறுந்தியது. 

சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் படத்தின் மீதம் உள்ள படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்த டாக்டர் படத்தின் செல்லம்மா என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தில் SK ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் அறிமுகமாகிறார். யோகிபாபு முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்தப் பாடலின் வரிகள் இன்றைய இளைஞர்களை கவரும் விதமாக உருவாக்கப்பட்டிருந்த நிலையில் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. டிக்டாக் பேன் செய்த நேரத்தில் சரியாக வந்து அமைந்தது இந்த பாடல். 

இதைத்தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் அயலான். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். 24AM ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. கருணாகரன், இஷா கோபிகர், பாலசரவணன் ஆகியோர் உள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தின் CG பணிகள் ஒருபக்கம் இருக்க, படப்பிடிப்பும் மீதம் உள்ளது போல் தெரிகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

One more pic from @navneth85 photography #Throwback

A post shared by Sivakarthikeyan Doss (@sivakarthikeyan) on