விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு, ஜோடி நம்பர் 1, அது இது எது என பல நிகழ்ச்சிகளின் மூலம் சின்னத்திரை வழியே மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து வெள்ளித்திரையிலும் கதாநாயகனாக அனைத்து வயதினரும் ரசிக்கும்படியான  ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படங்களை கொடுப்பது சிவகார்த்திகேயனின் வழக்கம்.

நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் டாக்டர். கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ளது டாக்டர் திரைப்படம்.

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் வழங்கும் டாக்டர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய நிர்மல் படத்தொகுப்பு செய்துள்ளார் ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார் நடிகர் வினய். 

மேலும் யோகிபாபு, இளவரசு, அர்ச்சனா, தீபா, ரெட்டின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்டோபர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் டாக்டர் படத்தின் அசத்தலான புதிய ப்ரோமோ வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளன. ட்ககரான இந்த ப்ரோமோ வீடியோக்களை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.