குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் திரைப்படங்களை கொடுத்து மகிழ்வித்து, தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஹீரோ. இதனையடுத்து அடுத்தடுத்து 3 திரைப்படங்கள் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளிவரத் தயார்நிலையில் உள்ளன.

இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஏலியன்-சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக தயாராகியிருக்கும் அயலான் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ள டான் திரைப்படமும் நிறைவடைந்து சமீபத்தில் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் டாக்டர் திரைப்படம் வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் டாக்டர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு வெளியான டாக்டர் திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது டாக்டர் திரைப்படத்திலிருந்து Soul Of Doctor எனும் டாக்டர் ஸ்பெஷல் புரோமோ வீடியோ வெளியானது. மாஸ்ஸான இந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.