யூடியூபின் மூலம் சமூகப்பிரச்னைகளை மக்களுக்கு எடுத்துரைத்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் புட் சட்னி ராஜ் மோகன்.தன்னுடைய கூர்மையான கருத்துடைய பேச்சால் பலரையும் பெரிதும் ஈர்த்துள்ள இவர் அவ்வப்போது படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்து வருகிறார்.

Sivakarthikeyan Launches Black Sheep Production

ராக்போர்ட் என்டர்டைன்மெண்ட் மற்றும் பிரபல யூடியூப் நிறுவனமான ப்ளாக் ஷீப் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படத்தில் ராஜ் மோகன் இயக்குனராக அறிமுகமாகிறார்.மைக்செட் ஸ்ரீராம் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.அம்மு அபிராமி இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

Sivakarthikeyan Launches Black Sheep Production

சந்தோஷ் தயாநிதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்கியது.சிவகார்த்திகேயன் இந்த பூஜையில் கலந்துகொண்டு படத்தை துவக்கி வைத்தார்.படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.